search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிமோனா ஹெலப்"

    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

    ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

    அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
    இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

    இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதுகிறார்கள். #FrenchOpen2018 #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.



    ஸ்டீபன்ஸ் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    களிமண் தரையில் விளையாடுவதில் ‘கிங்’காக திகழும் நடால் இறுதிப்போட்டியில் 7-ம் நிலை வீரரான டொமினிக் தியம்பை (ஆஸ்திரியா) சந்திக்கிறார். அவர் அரை இறுதியில் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற கணக்கில் இத்தாலி வீரர் மார்கோவை வீழ்த்தினார். #FrenchOpen2018 #SimonaHalep
    ×